The Hours (2002) - ஒரு விரிவான பார்வை

மூன்று பெண்கள். எல்லாம் எழுத்தாளர்கள். மூன்று காலங்கள். மூன்று துயர் முடிவுகள்.

சுனந்தா தாமரைச்செல்வன்

5/23/20241 min read

The Hours (2002) - ஒரு விரிவான பார்வை

"Mrs. Dalloway said she would buy the flowers herself"

மூன்று பெண்கள். எல்லாம் எழுத்தாளர்கள். மூன்று காலங்கள். மூன்று துயர் முடிவுகள்.

பெண் எழுத்தாளுமை Virginia Woolf எனக்கு சிறு வயது முதலே மிகவும் பிடித்தமான எழுத்தாளர். அக்காலத்திலேயே (20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்) Jane Austen போன்றோர் வெறும் காதல் கதைகளை மட்டும் பெண்ணிய உணர்வுகளை நுட்பமாக கையாள்வர். ஆனால் Virginia woolf கதைகளில், பெண்ணின் வாழ்க்கையில் ஒவ்வொரு படிநிலைகளில் ஏற்படும் பக்குவப்படுதலை, கோவத்தை, ஆற்றாமையை, தனிமையின் துயரத்தை என்று எல்லாமே நாவலின் ஊடே வடித்திருப்பார்.

Derivative of derivates தான் இந்த படம்.

தமிழ் நாவல்களில் சமீபமாக வந்த எஸ்.ராவின் "மண்டியிடுங்கள் தந்தையே" ஒரு derivative படைப்பு. டால்ஸ்ட்டாய் ஒரு கதாபாத்திரமாக வருவார்.

ஒரு நாவல் ( Mrs.Dalloway by Virginia Woolf - 1925) , அதை தழுவி எழுதப்பட்டிருக்கும் இன்னொரு நாவல் (The Hours by Micheal Cunninway -1998). இதில் முந்தைய நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஒரு கதாப்பாத்திரமாக வருகிறார்.

இந்த derivative நாவலை தழுவி எடுக்கப்படும் படம்.(The Hours by Stephen Daldry -2002).ஒன்பது oscar nomination. Virginia Woolf ஆக வரும் Nicole Kidman, இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான oscar விருதை வென்றுள்ளார்.அந்த நேரத்தில் உச்ச நடிகையாக Nicole Kidman மட்டுமல்ல, நடிப்பு அரக்கிகள் Meryl Streep மற்றும் julianne moore இதில் முக்கிய கதாப்பாத்திரங்கள். The hours படம் நடித்தப்பொழுது மூவருக்குமே 35+ வயது. பேரிளம்பெண்களாக அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரங்களில், நடிப்பை அள்ளி வழங்கியுள்ளனர்.

இந்த வண்ணக்குவியல் குப்பை heeramandi-யை நினைத்துக்கொண்டேன்.

ஆங்கில இலக்கியத்தில் modern feminism ஐ, அதன் அழுக்குகளோடு எழுத ஆரம்பித்த எழுத்தாளர்களில் Virginia முதன்மையானவர் என்பது என் கருத்து. அடுத்து Sylvia Plath.

The Hours படத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள இரண்டு ஆண் கதாப்பாத்திரங்கள்.

1. Virginia Woolf இன் அன்புக்கணவர் Leonard Woolf.

2. Clarissa Vaugh இன் முன்னாள் கணவர் - Richard Brown.

ஹீரோக்களை கொண்டாடும் hero centric கதையம்சம் பெற்ற படங்கள் வந்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்த படைப்பு ஒரு refreshing factor, அந்த timeline இல்.

கதைக்கு வருவோம். ஆழமான கதை. Non Linear story telling வகையறா. மூன்று காலக்கட்டங்களில், தங்கள் வாழ்க்கையை சகித்துக்கொள்ளவே இயலாமல் தற்கொலையை நோக்கி நகரும் 3 கதாப்பாத்திரங்கள்.

1925

Virginia Woolf தன் இறுதி நாட்களில் depressiom/ bipolar disorder, உளவியல் நோய்களுடன் உடன் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. சரியான உளவியல் மருத்துவ சிகிச்சை குறித்தான விழிப்புணர்வு இல்லாத நேரம் அது. ஆனால் Virginia விற்கு தெளிவாகப் புலப்படுகிறது. உளவியல் நோயுடன் எழுதப்பட்டிருக்கும் அவரது நாவல்கள் பெருமளவில் விற்று தீர்ந்துள்ளன. அந்த கசப்பான நாளில், Clarissa Dalloway கதாப்பாத்திரத்தை கொல்வதா வேண்டாமா என்று பெரும் அவதியுடன் அவரது நாளை தொடங்குவார். அவரது இளைய சகோதரி தன் குழந்தைகளுடன் virginia வின் வீட்டிற்கு வரும்பொழுது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவார். Virginia woolf வின் கணவர் Leonardக்கு தன் மனைவி அவதியுறுவதைக் கண்டு எப்பொழுதும் ஒருவிதமான விழிப்பு நிலையிலேயே இருப்பார். எப்பொழுது வேண்டுமானாலும் அது நிகழலாம், நிகழ்ந்தே தீரும் ஆனால் நிகழ்வதை கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்ற மனநிலையில் வாழ்ந்துவருவார். Soul mate consciousness என்று சொல்லலாம். மனைவி வெளியே சென்றுள்ளார் என்று தன் வீட்டு வேலையாட்கள் கூறும்பொழுது பதைப்பதைப்புடன் நகரம் முழுக்க சுற்றியலைவது ஒரு கவிதையாக காட்சிப்படுத்திருப்பர். Virginia இறக்கும் முன் தன் கணவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதியிருப்பார். மிக தெளிவான கருத்துக்களுடன் தன் முடிவை நியாப்படுத்தாமல், மனோவியாதியுடனான தன் போராட்டத்தை சகிக்கவியலாமல் இம்முடிவை எடுப்பதாக எழுதியிருப்பார்.

1951

Laura Brown 5 வயது மகனுடனும், கணவருடனும் los angeles நகரத்தில் வாழ்ந்து வருவார். 6 மாதம் கருவுற்றிருப்பார். தன் பக்கத்துவீட்டு தோழி, கருவுறுமால் துயரப்படுவதைக் கண்டு தன் நிலையை யோசிப்பார். அக்காலக்கட்டத்தின் ideal housewife ஆக Laura இருப்பினும், எப்போது மகிழ்ச்சியற்ற மன நிலையிலேயே இருப்பார். அவரது மகன் richard க்கும் அம்மாவின் முடிவு அர்த்தப்படாமல் அர்த்தப்படும். தன்னை baby sitter உடன் விட்டுவிட்டு அம்மா திரும்பி வரமாட்டார் என்று அறிந்துக்கொண்டு பின்னாடியே ஓடுவதைக்கண்டு, நமக்கு வலிக்கும். Julianne Moore, Laura Brown ஆக நடித்திருப்பார். வெறுமையான வாழ்க்கையை சகித்துக்கொள்ள இயலாமல் சமூகத்தின் கட்டமைப்புக்குள் அடைத்துக்கொள்ள விரும்பாமல் அலைபாயும் கதாப்பாத்திரமாக ஆர்ப்பட்டமில்லாத நடிப்பு.

2001

Clarissa Vaughn ஆக Meryl Streep. முந்தைய கதையில் வரும் laura-வின் மகனாக AIDS நோயுடன் தன் இறுதி நாட்களில் Richard Brown. அவருக்கு உதவும் தோழியாக Clarissa. Clarissa விற்கு வளர்ப்பு மகளும் இருப்பார். Coming of age கதைக்களத்தில் தன் பாலின partner உடன் வசித்து வரும் clara, எழுத்தாளர் richard க்கு பிறந்த நாள் விழாவை ஒழுங்கு செய்வதாக தொடங்கும் கதை. "எனக்காக நீ உயிரோடு இரு" என்று clarissa கெஞ்சும் நொடிகள் நம்மை கலங்கவைத்துவிடும்.

உளவியல் நோயின் அறிகுறிகளாக சினிமாவில் Meltdowns யும், psycho behaviours உம் சத்தத்துடன் தான் அதிகம் காட்சிப்படுத்திருப்பர். ஆனால் இப்படத்தில் தனக்குள்ளே வெடித்துச் சிதறும் நொடிகளை, ஆர்ப்பாட்மில்லா ஒரு மயான அமைதியுடன் காட்சிக்கோர்வைகளாக அமைத்திருப்பர்.

Mrs. Dalloway நாவலே ஒரு கதாப்பாத்திரமாகவே கொள்ளலாம். ஆனால் திரையின் பின்னே மற்ற முன்னணி கதாப்பாத்திரங்களை இயக்கும் கருவி. மூன்று பெண்களும் ஒரே வரியை படமுழுக்க சொல்வர்.

"Mrs. Dalloway said she would buy the flowers herself"

மேற்கத்திய உலகில் ஒரு பெண்ணிற்கு பூ வழங்குவது ஒரு romantic gesture. கூந்தலில் அணியாவிட்டாலும், பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான பரிசுப்பொருளாக பூக்கள் இன்றுவரை தொடர்கிறது.

ஆனால் Clarissa Dalloway சொல்வதுபோல அமைக்கப்பட்டுள்ள அந்த முதல் வரி, ஒரு பெண்ணின் தனிமையின் உச்சமாக பார்க்கபடுகிறது. குடும்ப அமைப்பின் கடமைகளையும் வேலைகளையும் தொய்வுறாமல் செய்யும் ஒரு பேரிளம்பெண், என் தேவைக்கான பூவை நானே வாங்கிக்கொள்கிறேன் என்பது ஒவ்வொரு பெண் வாழ்க்கையின் எதார்த்தம். A sad moment of independence and acceptance.

எது பெண்களுக்கான சுதந்திரம்? எந்த தேவை அவளுக்கான முதன்மை தேவை? அவளுடைய விருப்பம் தான் என்ன?எல்லாம் கிடைத்த வாழ்க்கை அவளுக்கு பிடித்த வாழ்க்கையா? வெற்றி பெற்றாலும் பிடித்ததை செய்தாலும் மனப்பிறழ்வின் காரணங்கள் தான் என்ன?என்று பல பல கேள்விகள். பதில்களை பார்வையாளர்கள் தான் கூற வேண்டும் இல்லை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

எக்காலக்கட்டத்திலும் பெண்களின் உடல் மற்றும் உளவியல் நலம் குறித்தான புரிதலும் விழிப்புணர்வும் இருபாலினத்தினரிடமும் இல்லை என்பது மறுக்கவியலா உண்மை.

கலைஞர்கள், எழுத்தாளர்கள் (ஆணோ/பெண்ணோ) மனப்பிறழ்வின் உச்சத்தில் இருக்கும் போதுகூட, மிகச்சிறந்த படைப்புகளைப் படைக்கும் வல்லமை உடையவளாகிறார்கள் என்பது வரலாறு. காலத்தினூடே பயணித்து இன்றும் கொண்டாட்டப்படும் அற்பதமான படைப்புகள் நமக்கு சொல்வது அதுதான். ஒரு ஓவியத்திற்காக தன் காதினை தானே அறுத்துக்கொண்ட van gogh, உலகப்புகழ் பெற்ற நாவலினை எழுதிவைத்துவிட்டு ஆற்றோடு போன virginia woolf போன்றோர்.

"லங்கா தகனம்" கதையில் நான் கூறும் suicidal artistic perfection குறித்து ஜெயமோகன் தமிழில் நமக்கு விளங்கும் படி எழுதியிருப்பார்.

இப்படத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், Virginia Woolf தொடங்கி,Gender fluidity என்று படமுழுக்க விரசமில்லாமல் காட்சிப்படுத்திருப்பர்.தன் பாலின ஈர்ப்புக்குறித்தான social acceptance/rejection வெவ்வேறு காலக்கட்டத்தில் எவ்வாறு இருந்தது என்ற கருத்தாக்கமும் கதைக்குள் இருக்கும்.

Virginia Woolf இன் "Mrs.Dalloway" என்ற நாவலை தழுவியே படம் இருப்பினும்,

கதைக்கருவில் VW எழுதிய மற்றொரு படைப்பான 'A Room of One's own' கட்டுரையின் நுட்பங்கள் காட்சிகள் அங்காங்கே அமைந்திருக்கும். குடும்ப அமைப்பில் பெண்களுக்கு தனியே ஒரு அறை எந்த வீட்டிலும் இருப்பதில்லை. பாலின சமத்துவம், பெண்களுக்கு இருக்கும் நிதி சுதந்திரம் என்று பெண்ணியத்தின் உட்கூறுகளை அடித்தளங்களாக கொண்டிருக்கும் கட்டுரை அது. ஆனால் virginia woolf தனக்காக தன் வீட்டில் தனியறை ஏற்படுத்திக்கொண்டார்.

"A room of one's own" excerpts

Anonymous (Anon) who wrote so many poems without signing them, was often a women.

A women must have money, and a room of her own if she is to write fiction.

Anything may happen when womenhood has ceased to be a protected occupation.