Frida is not just an artist but a revolutionist. In her own way.

Frida அம்மையார் முதலில் ஒரு சிறந்த ஓவியர். முற்போக்காளர். கம்யூனிஸ்ட். Tehuana இனக்குழுவை சார்ந்த மெக்சிக்கனின் இனப்பற்றாளர். இதற்கெல்லாம் மேல அவங்க ஒரு பெண்ணியவாதி.

Sunandha Thamaraiselvan

7/15/20242 min read

நானும் என் மகளும் கடந்த இரண்டு நாட்களாக பிரிடா கோலோ-வின் documentary ஒன்றினை பார்த்து முடித்தோம்.

குழந்தைகள் இவ்வயசில் ஒரு documentary பார்க்க பொறுமைக்கொள்வது ரொம்ப அதிசயம். அதுவும் documentary-யின் மொழி Spanish, ஆங்கிலத்தில் subtitles படித்துப் படித்து எப்படியோ பார்த்துவிட்டாள்.

முதன்முதலில் அவள் Frida kohlo பற்றி கேள்விப்பட்டது இந்த Vennila Thayumanavan விற்கு நான் அனுப்பிய கவிதை குறுஞ்செய்தி படித்துதான்.

Frida அவள் தோழியின் மனமுறிவுக்கு ஆறுதலாக எழுதிய கவிதை. ஓர் ஆணின் மீது கொள்ளும் கட்டற்ற பெண்ணின் காதல் முடிவுறாது, ஆனால் கடக்க முயற்சிப்போம் என்ற தொனியில் என்பது தான் அக்கவிதையின் சாரம்சம்.

Frida அம்மையார் முதலில் ஒரு சிறந்த ஓவியர். முற்போக்காளர். கம்யூனிஸ்ட். Tehuana இனக்குழுவை சார்ந்த மெக்சிக்கனின் இனப்பற்றாளர். இதற்கெல்லாம் மேல அவங்க ஒரு பெண்ணியவாதி.

பின்னர் நானும் மகளும் Frida வின் ஓவியங்களை வலைதளத்தில் பார்த்தோம். ஒவ்வொன்னுக்கும் அதன் பின்புலம் மற்றும் வரையப்பட்டிருக்கும் style குறித்து பார்த்து வியந்தோம்.

பிரிடாவின் கோர விபத்து, டியாகோவை திரும்ப மணந்தது, frida - வின் பற்பல காதல்கள், கருக்கலைப்புகள் விரசமில்லாமல் வெறும் நிழற்படங்கள், ஓவியங்கள், நிஜக் காணொளித் தொகுப்புகள் வழியே காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இந்த மாதிரி complex விடயங்களை பத்து வயது மகளுடன் எப்படி பார்த்தேன்? ஆழமான உறவுச்சிக்கல்களையும், பெண் உடல் குறித்தான உளவியல் உயிரியல் கோட்பாடுகளையும் புரிந்து ஆராயும் வயதும் முதிர்ச்சியும் உண்டா அவளுக்கு...? தெரியவில்லை.ஆனால் திடமாக ஒன்றை நான் நம்புகிறேன். ஏதேனும் கேள்வியோ சந்தேகமோ வருமாயின் எங்களிடமே நாளை கேட்பாள் என்று. பதின்மத்தில் நமக்கு கிட்டாத பாலியல் குறித்தான சரியான விழிப்புணர்வை, உளவியல் படிமானங்களை, இயற்கையின் உட்கூறுகள் குறித்த கல்வியை இவ்வயது தொடங்கியே கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோள் எனக்கும் என் கணவருக்கும் உண்டு.

Frida வின் வாழ்க்கை ஒரு காவியம். எழுத்தாளுமையோ ஓவியத்திறமையோ பெற்றதனால் மட்டும் அல்ல. Frida தனக்கு பிடித்ததை, இறுதிமூச்சு வரை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் வாழ்ந்து மறைந்தார். காலம் சென்றும் அவர் படைப்புகள், ஓவிய உலகில் கொண்டாடித்தீர்க்கப்பட வியலாதது.

Frida is not just an artist but a revolutionist. In her own way.

வெண்ணிவாவிற்கு, அனுப்பிய கவிதை

Frida Kahlo to Marty McConnel

Leaving is not enough; you must

stay gone.

Train your heart

like a dog.

change the locks

even on the house he’s never

visited.

you lucky, lucky girl.!

you have an apartment

just your size.

a bathtub

full of tea..

A heart the size

of Arizona, but not nearly

so arid. don’t wish away

your cracked past, your

crooked toes, your problems

are papier mache puppets...

You made or bought because the vendor

at the market was so compelling you just

had to have them. you had to have him.

and you did.!

And now you pull down

the bridge between your houses,

you make him call before

he visits, you take a lover

for granted, you take

a lover who looks at you

like maybe you are magic.

Make

the first bottle you consume

in this place a relic. Place it

on whatever altar you fashion

with a knife and five cranberries.

don’t lose too much weight.

stupid girls are always trying

to disappear as revenge. and you

are not stupid.!

You loved a man

with more hands than a parade

of beggars, and here you stand. heart

like a four-poster bed. heart like a canvas.

Heart leaking something so strong

they can smell it in the street.

🔴

Frida Kohlo ஓவியங்களின் வலைத்தளம்

https://www.fridakahlo.org/the-two-fridas.jsp

Frida'வின் documentary Prime Video தளத்தில் காணக்கிடைக்கிறது.

Leonardo da Vinci யின் ஓவியத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட Da Vinci Code புத்தகம் படித்த நாள் முதல், நான் ஒரு கத்துக்குட்டி Art Appreciator. Modern art பின் நவீனத்துவ ஓவியங்கள், ஓவியர்கள் குறித்து ஓரளவு விழிப்புணர்வு உண்டு.

Frida வின் வாழ்வில் பல வலிகள். வலிகள் எல்லாம் ஓவியங்களாக வடித்தார். கடைசிக்காலத்தில் New York இல் எப்படியோ ஒரு art show நடத்தில், முதுகு தண்டுவட சிகிச்சை முடிந்து stretcher இல் அழைத்துவரப்பட்டார். பதின்ம வயது முதல், தான் அனுபவித்த காதல்களையும் வலிகளையும் கடிதங்கள் வாயிலாகவும் diary குறிப்புகள் வாயிலாகவும் எழுதிக்கொட்டி தீர்த்தார். Fridaவின் ஓவியங்கள், அவர் பதின்மவயதில் நடந்தேறிய mexican புரட்சியையும் ஒற்றியும் இருந்தது.

Frida விற்கு 4 முறை குழந்தைகள் வயிற்றில் இறந்தப்போனது. தன் காதல் கணவருடன் ஒரு மகனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியம் நிறைவேறாமலே இறந்துவிட்டார். New york நகரின் புகழ்ப்பெற்ற St Henry மருத்துவமனையில் தன் முதல் குழந்தையை தொலைத்ததை ஒரு ஓவியமாக வரைந்திருப்பார். காண்போருக்கும் வலியை தரக்கூடிய ஆனால் மிக அழகான ஓவியம்.

தான் மிகவும் நேசித்து கரம் பிடித்த டியாகோவிடம் மனமுறிவு ஏற்பட்டவுடன் வரைந்த 'Two Fridas' ஓவியம். அதில் Tehuana இனக்குழுவின் சம்பிரதாயத்துடன் மனக்கோலத்தில் இருக்கும் இளவயது frida தன் இதயத்தின் பிரதான நரம்பு அறுபட்டு இரத்தத்துளிகள் வெள்ளை உடையில் சொட்ட சொட்ட, அதை ஒரு கத்திரியால் பிடித்திருப்பார்.

இரண்டாவது frida பேரிளம்பெண்ணாக, முதல் frida-வின் இதயத்தின் வாயிலாக தன் இதயத்தில் இரத்தம் செலுத்தப்பட்டிருப்பதாக அமர்ந்திருப்பார். மனம் முடைந்து இரத்தம் கசிந்தாலும், இரண்டாவது frida எப்படியும் தன் முயற்சியால் வாழ்ந்துவிடுவார் என்ற ஒரு நோக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

Frida kahlo-வின் ஓவியங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, இரண்டு விடயங்களை என் மகளிடம் சொன்னேன்.

1. காண்போரின் கண்வழியில் தான் ஓவியம் பொருள்படும், நான் இவ்வாறு புரிந்துக்கொள்கிறேன். (Eyes of the beholder)

2.எந்த விரிவான விளக்கத்தையும், படித்தும் கேட்டும் உணராமல் ஓவியத்தை பொருள் படுத்திக்கொள்ளலாம் அது நம் இஷ்டம். அதுதான் artistic freedom of the beholder. பல படைப்பாளிகளின் விருப்பமும் அதுதான். No explanations given.. None taken.